Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டி; விடைபெற்றார் நவோமி ஒசாகா

23/04/2025 04:17 PM

மாட்ரிட், 23 ஏப்ரல் (பெர்னாமா) -- மாட்ரிட் பொது டென்னிஸ் போட்டியில் தோல்வி கண்டு உலகின் முன்னாள் முதல் நிலை விலையாட்டாளர் நவோமி ஒசாகா விடைபெற்றார்.

நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அவர் லூசியா ப்ரோன்செட்டியுடன் மோதினார்.

முதல் ஆட்டத்திலேயே தோல்வி கண்டிருப்பது நவோமி ஒசாகா வின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

முதல் செட்டில் 6-4 என்று தோல்வி கண்டாலும், இரண்டாம் செட்டில் அவர் 2-6 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாம் செட்டில் 6-4 என்ற புள்ளிகள் ஒசாகா, தமது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

ஒசாகாவுக்கு எதிராக விளையாடிய ஆட்டங்களில், இத்தாலியின் ப்ரோன்செட்டி நேற்று தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இரண்டாம் ஆட்டத்தில் ப்ரோன்செட்டி, ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் மேடிசன் கீஸ் உடன் விளையாடவுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில், பிலிப்பைன்சின் இளம் ஆட்டக்காரர் அலெக்ஸாண்ட்ரா ஈலா, விக்டோரியா டோமோவாவுடன் களம் கண்டார்.

இவ்வாட்டத்தில் 6-3 6-2 என்ற நேரடி செட்களில் ஏலா எளிதாக வெற்றி பெற்றார்.

அடுத்த ஆட்டத்தில் அவர், இகா ஸ்வியாடெக்குடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)