உலகம்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்தியா உயர் நீதிமன்றம் தற்காலிக ஜாமீன்

10/05/2024 08:48 PM

புதுடெல்லி, 10 மே (பெர்னாமா) -- ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு,  இந்தியா உயர் நீதிமன்றம் இன்று தற்காலிக ஜாமீன் வழங்கியது.

இதன்வழி, அவர் தற்போதைய பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்யவதோடு, எதிர்க்கட்சி கூட்டணியையும் உற்சாகப்படுத்தலாம்.

ஏழு கட்டங்களாக நடத்தப்படும் பொதுத் தேர்தலின் இறுதி நாளான ஜூன் முதலாம் தேதி வரையில் அவருக்கு தற்காலிக ஜாமின் வழங்கப்பட்டிருக்கும் வேளையில்,  ஜூன் 2-ஆம் தேதி கெஜ்ரிவால் போலீசாரிடம் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம், எதிர்கட்சி வேட்பாளர்களை காயப்படுத்தும் நோக்கில், உளவு நிறுவனங்களைப் பயன்படுத்துவதால், வாக்குப்பதிவு செயல்முறையில் பாதிப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், நடப்பு அரசாங்கம் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தது.

இதனிடையே, தங்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால்-உம் ஆம் ஆத்மி கட்சியும் நிராகரித்துள்ளது.

கெஜ்ரிவால் ஏப்ரல் முதலாம் தேதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனிதா அக்கட்சி சார்பாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)