உலகம்

பிரேசில் : பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள்

10/05/2024 06:36 PM

போர்டோ அலெக்ரே, 10 மார்ச் (பெர்னாமா) -- தென் பிரேசிலில் மோசமான வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கே புயல் வீசும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தென் பிரேசிலில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு கருதி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், சிலர் அந்த அறிவுறுத்துலை புறக்கணிப்பதாக கூறப்படுகிறது.

ரியோ கிராண்டே டொசுல் மாநிலம் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த இயற்கை பேரிடரை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக போலீஸ் கூறியது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)