உலகம்

தாக்குதல் தொடர்ந்தால் இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் - பைடன்

10/05/2024 06:30 PM

வாஷிடங்டன் டிசி, 10 மார்ச் (பெர்னாமா) -- காசா மீது இராணுவ தாக்குதல் மேற்கொள்ள போதிய உபகரணங்கள் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

காசாவின் ராஃபா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டிற்கு வழங்கப்படும் இராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கும் நிலையில், இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ராஃபா மீது தாக்குதலை மேற்கொள்ள அமெரிக்காவின் உதவி தேவைப்படாது என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் டேனில் ஹகாரி தெரிவித்திருக்கிறார்.

ரஃபாவில் இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தினால், நிலைமை மேலும் மோசமாகும் என்று அமெரிக்கா கணித்திருக்கிறது.

அதனால், இஸ்ரேலுக்கு பெரிய குண்டுகளை அனுப்புவதை ஜோ பைடன் கடந்த வாரம் நிறுத்தி வைத்தார்.

பைடனின் இந்த அறிவிப்பு ராஃபா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அமெரிக்காவின் உதவியின்றி ராஃபா மீது நடத்தப்படும் தாக்குதல் தொடப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)