உலகம்

சீனாவின் போர்க்கப்பல்கள்; தைவான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

10/05/2024 06:23 PM

தைபெய், 10 மார்ச் (பெர்னாமா) -- தைவானைச் சுற்றி சீனாவின் போர்க்கப்பல்கள் காணப்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடலோரக் காவல் அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.

சீனாவின் இந்நடவடிக்கை, தைவானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் சாடியிருக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், சீனாவின் ஐந்து போர் கப்பல்கள் மற்றும் 23 போர் விமானங்கள் தைவானை சுற்றி வலைத்துள்ளதாக தைபே கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று தைவான் கடல்பகுதியில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து, சீனா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

தனது எல்லைக்குள் நுழைந்த சீனாவின் அனைத்து விமானங்களும் கப்பல்களும் 90 நிமிடங்கள் கழித்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.

தைவான்  தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறிவருகிறது.

மேலும், அந்த தீவு நாட்டை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர வன்முறையை பயன்படுத்தவும் சீனா தயங்காது என்று முன்னதாக அறிவித்திருந்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)