பொது

செயன் ராயன் அப்துல் மதின் மரணம் தொடர்பான விசாரணையை போலீஸ் நிறுத்தவில்லை

08/05/2024 07:57 PM

கோலாலம்பூர், 08 மே (பெர்னாமா) -- மனவளர்ச்சி குறைபாடுடைய சிறுவன் செயன் ராயன் அப்துல் மதின் மரணம் தொடர்பான விசாரணையை போலீஸ் நிறுத்தவில்லை.

இதுவரை அந்த வழக்கு குறித்த விசாரணை தொடரப்படுவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் முஹமட் சுஹாய்லி முஹமட் சைன் தெரிவித்தார்

புதிய ஆதாரங்களைத் தேடி விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"நான் முன்பு சொன்னது போல், நாங்கள் எந்த வழக்கையும் மூட வில்லை. வழக்கு இப்போது புதிய ஆதாரங்களுக்காகக் காத்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, வெகுமதி வழங்கப்பட்ட பிறகும் எங்களுக்கு புதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

"இந்த விசாரணை குறித்து மக்கள் திருப்தியடையவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் கூறியது போல் இவ்வழக்கை ஒருபோதும் மறக்க மாட்டோம். இது என்னுடைய  சமூகக் கடன்," என்று அவர் கூறினார்.

புதன்கிழமை புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முஹமட் சுஹாய்லி அந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த ஆறு வயது சிறுவன், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி டமான்சார டாமாய் குடியிருப்பு பகுதியில் காணாமல் போனதோடு, மறுநாள் இடாமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஆற்றோரப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)