விளையாட்டு

பேரிஸ் ஒலிம்பிக் போட்டி; விளையாட்டாளர்களுக்கு பிரத்தியேக படுக்கைகள் வடிவமைப்பு

08/05/2024 07:50 PM

கோத்தா, 08 மே (பெர்னாமா) -- பிரான்ஸ், பேரிஸ்சில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் விளையாட்டாளர்கள் போதிய ஓய்வு பெறுவதை உறுதி செய்ய, அவர்களுக்கு பிரத்தியேக படுக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மென்மையான மேற்பரப்பு, மிதமானது மேற்பரப்பு, உறுதியான மேற்பரப்பு மற்றும் கூடுதல் உறுதியான மேற்பரப்புகள் இந்த படுக்கைகளில் உள்ளன.

விளையாட்டாளர்களின் உடல் எடையை பொருத்து, அவர்களுக்கான படுக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டாளர்கள் தங்கள் உடல் வடிவத்தின் புகைப்படங்களை ஒரு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உடல் எடை மற்றும் உடல் அமைப்பை பொருத்து படுக்கையின் மேற்பரப்பு  தானாகவே மாறிகொள்ளும்.

இப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 16,000 படுக்கைகளை ஜப்பான் வடிவமைத்துள்ளது.

2024 பேரிஸ் ஒலிம்பிக் போட்டி, ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]