அரசியல்

கே.கே.பி இடைத்தேர்தலில் 75% வாக்களிப்பர் - எஸ்.பி.ஆர்

07/05/2024 07:35 PM

கோலா குபு பாரு, 07 மே (பெர்னாமா) -- வரும் மே 11-ஆம் நடைபெறவிருக்கும் கோலா குபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் 75 விழுக்காட்டிற்கும் அதிமான வாக்காளர்கள் வாக்களிப்பர் என்று தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர் கணித்துள்ளது.

இந்நிலையில், கோலா குபு பாரு வாக்காளார்களைத் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும்படியும், இந்த இடைத்தேர்தலை சாதாரணமாக எண்ண வேண்டாம் என்றும் எஸ்.பி.ஆர் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் கானி சாலே கேட்டுக் கொண்டார்.

''வேண்டாம். வெளியே சென்று வாக்களிக்க வேண்டாம் என்று நினைக்காதீர்கள். இது நமது நண்பர்களிடமிருந்து (வாக்காளர்கள்) நாம் கேட்கும் பொதுவான புகார் ஆகும். அவர்கள் பொறுப்பை இலகுவாக எடுத்துக் கொண்டதாக உணரலாம். ஆனால் உண்மையில் ஒரு வாக்கு தேசிய ஆட்சிக்கு ஆக்கப்பூர்வமானது,'' என்றார் அவர்.

அரச ரெஜிமான் செம்போயான் 4, எர்ஸ்கைன் முகாமில் இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பை பார்வையிட்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கோலா குபு பாரு இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)