பொது

துன் மகாதீரை கைது செய்யும் எண்ணமில்லை - அசாம் பாக்கி

07/05/2024 07:16 PM

புத்ராஜெயா, 07 மே (பெர்னாமா) -- சொத்து அறிவிப்பு விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டை கைது செய்யும் எண்ணம் எஸ்.பி.ஆர்.எம்-க்கு இல்லை.

ஏனெனில், அவர் மீதான விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

''அவரை கைது செய்யும் எண்ணம் இல்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,'' என்றார் அவர்.

எஸ்.பி.ஆர்.எம்-ஆல் விசாரிக்கப்பட்ட உயர்மட்ட நபர்களில் துன் மகாதீர் முஹமட்டும் ஒருவர் என்று முன்னதாக அசாம் பாக்கி தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் சொத்துகளை அறிவிக்கும்படி துன் மகாதீரின் பிள்ளைகளான மிர்சான் மகாதீர் மற்றும் டான் ஶ்ரீ மொக்சானி மகாதீருக்கு 2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம் செக்‌ஷன் 36-இன் கீழ் அறிவிக்கை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)