பொது

அரசாங்கத்தில் ஏ.ஐ; நாளை அறிவிப்பார் பிரதமர்

07/05/2024 06:34 PM

புத்ராஜெயா, 07 மே (பெர்னாமா) -- அரசாங்கத்தில் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-ஐ இலக்கவியல்மயமாக்கி ஏற்றுக் கொள்வது தொடர்பில் நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கவிருக்கிறார்.

கொள்கையளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்குவது மட்டுமின்றி, மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள முதலீட்டாளர்களின் விவகாரங்களையும் அது மறைமுகமாக எளிதாக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

''நாங்கள் கொள்கையளவில் உடன்பட்டுள்ளோம். அந்தந்த தளங்களைக் கட்டுப்படுத்த முற்படுவதால், சில துறைகள், சில சமயங்களில் தயக்கம் அல்லது மறுப்பு கூட காட்டலாம் என்பதை நாளை அமைச்சரவையில் நான் உறுதிப்படுத்துகிறேன். இது 80-களின் சிந்தனை. நாங்கள் அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். மேலும், மைக்ரோசோஃப்ட், கூகுள் ஆகியவற்றிற்கும் விளக்கமளிப்பேன். குறிப்பிட்ட பாதுகாப்பு சிக்கல்கள் இல்லாவிட்டால் நாங்கள் விரிவாக்குவோம். தேசிய பாதுகாப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவை அவசியம் வேண்டும்,'' என்றார் அன்வார்.

உலகில் உள்ள பல பெருநிறுவனங்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து, அண்மையில் மைக்ரோசோஃப்ட் நிறுவனம் தனது முதலீட்டை அறிவித்திருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)