உலகம்

டெக்சாஸ்சில் இடைவிடாது  பெய்த கனமழையால் ஹாஸ்டனில் கடும் வெள்ளம்

05/05/2024 08:00 PM

டெக்சாஸ், 05 மே (பெர்னாமா) -- அமெரிக்கா டெக்சாஸ்சில் இடைவிடாது  பெய்த கனமழையால் ஹாஸ்டn பகுதியைச் சுற்றிலும் சனிக்கிழமை வெள்ளம் ஏற்பட்டது.

அதற்கு முன்னதாகவே, அங்குள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை மீட்பு குழுவினர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி இருக்கின்றனர். 

பேரிடர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள், பாதுகாப்பு தேடி தங்களது வீடுகளில் இருந்து வெளியேறினர். 

ஹாஸ்டனில் இருந்து கிழக்கு டெக்சாஸ்சின் புறநகர் பகுதிவரை வெள்ள நீர் சூழ்ந்தது.

படகுகள் மூலம் மக்களுடன், அவர்களது வளர்ப்பு பிராணிகளும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை இரவுவரை கனமழையால் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)