உலகம்

தென் சீனாவில் வெள்ளம்; 11 பேர் காணவில்லை; ஆயிரக்கணக்காணோர் இடம்பெயர்வு

22/04/2024 08:04 PM

பெய்ஜிங், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- தென் சீனாவில், குவாங்டாங் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், 11 பேர் காணாமல் போனதோடு, ஆயிரக்கணக்காணோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆற்று நீர் நிரம்பி வழியத் தொடங்கியது.

நூற்றாண்டிற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் பேரிடரான பெரும் வெள்ளம் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

அந்த மாகாணம் முழுவதிலும் இருந்து 53,000 பேர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அவசரநிலை நிர்வகிப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

பெய் ஆற்றின் கரையைக் கடந்து செல்லும், வடக்கு குவாங்டாங் நகரமான கிங்யுவானில் இருந்து 45,000-க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர்.

திங்கட்கிழமை வரையில் கனமழைத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கும் வேளையில், அப்பகுதியில் இடியுடன் கூடிய புயல் வீசும் என்றும் கூறியிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)