அரசியல்

கே.கே.பி இடைத்தேர்தல்: போட்டியிடும் எண்ணத்தை பெரிக்காத்தனிடம் தெரிவிக்கும் கெராக்கான்

20/04/2024 07:03 PM

கோலா குபு பாரு, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- கோலா குபு பாரு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தமது எண்ணத்தை கெராக்கான் கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவத்திடம் தெரிவிக்கும்.

அக்கட்சி பரிந்துரைக்கும் வேட்பாளர், அச்சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெறுவதற்கு சாதகமான தனித்துவத்தைக் கொண்டிருப்பதை தாம் நம்புவதாக அதன் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறுகின்றார்.
  
இருப்பினும், அந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை நிர்ணயம் செய்வது பெரிக்காத்தான் தலைமைத்துவத்தைப் பொருத்தது என்றும் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு கெராக்கான் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் டத்தோ டோமினிக்  தெரிவித்தார்.

இன்று, செராஸ்-சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லாவ் அதனைக் கூறினார்.

கடந்த மாநிலத் தேர்தலில், அத்தொகுதியில் சிலாங்கூர் கெராக்கான் தலைவர், ஹன்ரி தியோ, பிஎன் சார்பில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)