பொது

ஒதுக்கீடு பெறுவதற்கு, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை ஆதரிக்கும் நிபந்தனை இல்லை

19/04/2024 07:50 PM

காஜாங், 19 ஏப்ரல் (பெர்னாமா) -- ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனும் நிபந்தனை இருப்பதாக எதிர்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டை டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

மாறாக, அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டே விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்க, ஒருமைப்பாட்டு அரசாங்க செயலகத்தின் தலைமைத்துவ உச்சமன்றம், கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் நேற்று அறிவித்திருந்தார்.

பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)