உலகம்

காசா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 76 பலி  

28/02/2024 09:33 PM

கோலாலம்பூர், 28 பிப்ரவரி (பெர்னாமா) -- பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 29,954 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதேவேளையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது 76 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து மொத்தம் 70,325 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502]