பொது

MWC2024: நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது

28/02/2024 09:19 PM

பார்சலோனா, 28 பிப்ரவரி (பெர்னாமா) -- MWC2024 எனப்படும் 2024-ஆம் ஆண்டு பார்சலோனா உலக தொடர்பு மாநாட்டில் மலேசியாவின் பங்கேற்பு மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதன்வழி, பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக தொலைத்தொடர்பு சாதனங்களின் ஆர்வத்தையும் நாடு ஈர்த்துள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

தங்களின் முயற்சிகளையும் சாதனைகளையும் முன்வைத்து 15 உள்ளூர் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று மலேசியாவின் பெயரை உலக அரங்கில் இடம்பெற்றச் செய்துள்ளதாகவும் ஃப்ஹ்மி கூறினார். 

இன்று, ஸ்பெயின், பார்சலோனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஃபஹ்மி அத்தகவல்களை வழங்கினார்.

திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் இந்த MWC2024-இல் மலேசிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை உட்படுத்தி 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.  

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7:00 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]