உலகம்

தெற்கு சுலவேசியில் நிலச்சரிவு; நால்வர் பலி

26/02/2024 09:43 PM

ஜகார்த்தா, 26 பிப்ரவரி (பெர்னாமா) -- இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவினால் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், அறுவர் காயமடைந்துள்ளனர். 

தெற்கு சுலவேசி பேரிடர் தணிப்பு முகமையின் செயல் தலைவர் அம்சன் பண்டோலோ கூறுகையில், நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இருபதற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)