உலகம்

நாடு முழுதும் பெரிய அளவிலான போராட்டம் வெடிக்கும்; இந்திய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

26/02/2024 07:52 PM

கீவ், 26 பிப்ரவரி (பெர்னாமா) -- நாடு முழுதும் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தவிருப்பதாக புதுடெல்லி அருகே முற்றுகையிட்டுள்ள இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க தவறினால், போராட்டங்கள் விரிவடையும் என்று அவர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

புதுடெல்லி வரை சென்று போராட்டத்தில் ஈடுபட முயற்சிக்கும் விவசாயிகளை போலிசார் தடுத்து வருகின்றனர்.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக புதுடெல்லி வெளியே முகாமிட்டு விவசாயிகள் தங்களின் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.

தடைகளை தாண்டி புதுடெல்லி செல்ல முயற்சிக்கும் விவசாயிகள் மீது, போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்து வருகிறது.

போலீசாருக்கும் விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இதுவரை ஐவர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502