பொது

விமான பயணச் சீட்டுக்கான உதவித் தொகை மடானி அரசாங்கத்தின் வாக்குறுதியாகும்

08/12/2023 06:52 PM

பங்சார், 08 டிசம்பர் (பெர்னாமா) -- FLYSISWA திட்டம் மூலம் பொது உயர்கல்வி கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் விமான பயணச் சீட்டுக்கான உதவித் தொகை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழி நடத்தும் மடானி அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

சொந்த ஊருக்குச் செல்லும் மாணவர்களின் சுமையைக் குறைக்க தீபகற்பம், சபா, சரவாக் மற்றும் லபுவானில் பயிலும் பொது பல்கலைக்கழக மாணவர்களுக்கு 300 ரிங்கிட் மதிப்புள்ள மின்னியல் பற்றுச் சீட்டு வழங்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

"மடானி அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பும் முயற்சியும் ஒன்று. எனவே, இந்த முயற்சியின் மூலம் மாணவர்களின் பணச்சுமையைக் குறைக்க முடிகின்றது", என்றார் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப்.

வெள்ளிக்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில் FLYSISWA தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய போது டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் அவ்வாறு கூறினார்.

பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி கழகம் மற்றும் மெட்ரிகுலேஷன் பயிலும் மாணவர்களும் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)