GE15 NEWS |
கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா) -- பேராக் மற்றும் பகாங் அரசாங்கத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் கொள்கையின் அடிப்படையிலேயே, அவ்விரு மாநிலங்களிலும் அரசாங்கத்தை அமைப்பதில், தேசிய முன்னணியும் நம்பிக்கைக் கூட்டணியும் ஒத்துழைப்பை மேற்கொண்டன.
அது குறித்து வலியுறுத்திய தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப, பல்லின மக்களைப் பிரதிநிதிக்கும் வகையிலும் இந்த ஒத்துழைப்பு அமைவதாக கூறினார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா குறிப்பிட்ட ஒருமைப்பாட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கு ஏற்ப, மையப்படுத்தப்பட்ட அரசியல், நடுத்தர மற்றும் முதிர்ச்சியடைந்த புதிய வழியை ஏற்படுத்தும் பொருட்டு இந்த கூட்டணி அமைந்துள்ளதாக டாக்டர் அஹ்மட் சாஹிட் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
இந்த அணுகுமுறை, மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுவதைத் தொடர, அரசாங்க ஒருமைப்பாட்டிற்கும் அமைதிக்கும் முன்னோடியாக விளங்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் இணைய பெரிக்காத்தான் நேஷனல் மறுத்ததைத் தொடர்ந்து, தற்போது அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கம், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்திருப்பதாக டாக்டர் அஹ்மட் சாஹிட் கூறினார்.
இந்த ஒத்துழைப்பு, அம்னோவின் கொள்கை ஒருபோதும் புறக்கணிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை