COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

எஸ்.டி.பி.எம் மாணவர்களின் வெற்றிக் களிப்பு

19/08/2022 08:48 PM

கோலாலம்பூர், 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று வெளியாகிய 2021-ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவுகளில் இந்திய மாணவர்கள் பலரும் சிறந்த அடைவு நிலையைப் பெற்று நாட்டிற்கும் சமுதாயத்திற்கு பெருமைச் சேர்த்துள்ளனர்.

எஸ்.டி.பி.எம் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைத்து அதற்கு பதிலாக டிப்ளோமா, சான்றிதழ் கல்வியைத் தேர்வு செய்பவர்களின் எண்ணங்களை இம்மாணவர்கள் முறியடித்துக் காட்டியுள்ளனர்.

அதிலும், எஸ்.டி.பி.எம் தேர்வு முடிவு பல்கலைக்கழக வாசலுக்கு தங்களை அழைத்துச் சென்றுள்ளதாக வெற்றி பெற்ற சில மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பெர்னாமா தமிழ்ச்செய்தியில் பகிர்ந்து கொண்டனர்.

தொடக்கத்தில் எஸ்.டி.பி.எம் கல்வி சற்று கடினமாகத்தான் இருந்தது.

காரணம், டிப்ளோமா கல்விக்கு இணையாகவே அதன் பாடத்திட்டங்கள் அமைந்திருந்தன.

ஆயினும், தமிழ் உட்பட ஐந்து பிரதான பாடங்களை தேர்வு செய்து கற்ற மாணவி வேணிதாரணி மணிமாறன், PNGK எனப்படும் மொத்த சராசரி புள்ளி மதிப்பீட்டில் நான்கு முழு மதிப்பெண்களைப் பெற்றிருக்கின்றார்.

சிரம்பான் தெங்கு அம்புவான் நூரா இடைநிலைப்பள்ளி மாணவியான இவர், நாடு தழுவிய அளவில் சிறந்த தேர்ச்சி பெற்ற பத்து மாணவர்களில் ஒருவராவார்.

பெருந்தொற்றுக் காலகட்டத்தில் தமது கல்வியைத் தொடங்கிய வேளையில் தாமும் பெரும் சவால்களையும் மன உளைச்சலையும் சந்தித்ததாக வேணிதாரணி கூறினார்.

''அந்த சமயத்தில் கல்வி கற்பதற்கே பெரிய சிரத்தையாக இருந்த நேரத்தில் எனது ஆருயிர் பாட்டி வேறு மரணமடைந்துவிட்டார். இந்த சோகம் வேறு ஒரு புறம் வாட்டி வதைத்தது. ஆயினும் பாட்டி மற்றும் பெற்றோரின் ஆசிரிரோடு தடைகளை உடைத்து படித்தேன். சிறந்த தேர்ச்சி பெற்றேன்,''என்று வேணிதாரணி மணிமாறன் 

அதுமட்டுமின்றி ஐந்தாவது பாடமான தமிழ்மொழியை தேர்வு செய்த போது பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

அந்த சூழ்நிலையிலும் பிரத்தியேக ஆசிரியர்களின் மூலமாக தமிழ்மொழியைக் கற்று அதிலும் முழு தேர்ச்சி பெற்றுள்ளது பெருமை அளிப்பதாக வேணிதாரணி கூறினார்.

எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மற்ற மாணவர்களும் தங்களின் வெற்றிக் களிப்பை பகிர்ந்துக் கொள்கின்றனர்.

''என்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் எனது பங்களிப்பைத் தாண்டி குடும்பத்தில் முழு ஒத்துழைப்பு வழங்கினர். அவர்களின் அனைவரின் ஆதரவுதான் என்னை இந்த வெற்றிப் பாதைக்கு வித்திட்டுள்ளது,'' என்று 3.83 CGPA பெற்ற  எலிசா ஜெயராதா ரூபன் ராஜ்குமார் தெரிவித்தார். 

''மற்றவர்களின் பங்களிப்பு ஒருபுறமிருப்பினும் நானும் கடுமையாக உழைத்தேன். அல்லும் பகலும் அயராது கல்வி கற்றேன். நிறைய மீள்பார்வை செய்தேன். பயிற்சிகளை மேற்கொண்டேன். இவை எனது வெற்றிக்கு காரணமாக அமைந்தது,'' என்று  3.58 CGPA பெற்ற ஷர்வேதா நாயர் மாதவன் தெரிவித்தார்.  

இந்த வெற்றியைத் தொடர்ந்து தங்களுக்கு உகந்த உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)