COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

ZIST சட்ட நிறுவனத்தின் சேவையை நிறுத்திக் கொண்டார் நஜீப்

19/08/2022 07:44 PM

புத்ராஜெயா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இறுதி மேல்முறையீட்டின் செவிமடுப்பின் இரண்டாம் நாளான இன்று, ZIST எனப்படும் Zaid Ibrahim Suflan TH Liew & Partners சட்ட நிறுவனத்தின் சேவையை, அந்த முன்னாள் பிரதமர் நிறுத்திக் கொண்டதாக இன்று நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

தேசிய தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையேற்ற ஐந்து வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவின் முன்னிலையில், மேல்முறையீட்டு விசாரணை தொடங்கியபோது, ​​நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் ஹிஷாம் தே போ தேக் இந்த விவரத்தைக் கூறினார்.

ஹிஷாம் அவ்விவரத்தை தெரிவித்தவுடன், அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரம் தமது வாதத்தைத் தொடங்கியதும், நீதிபதி தெங்கு மைமுன் இவ்வழக்கின் இறுதி மேல்முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்தார்.

Shafee & Co சட்ட நிறுவனத்தின் சேவைகளை உடனடியாக நிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்து, SRC International நிறுவனத்திற்குச் சொந்தமான நிதியிலிருந்து, நான்கு கோடியே 20 லட்சம் ரிங்கிட் முறைகேடு செய்த வழக்கில் தண்டனையை ரத்து செய்வதற்கான இறுதி மேல்முறையீட்டில் தமது சார்பில் வாதிட, கடந்த ஜூலை 26-ஆம் தேது நஜீப் ZIST-டை நியமித்தார்.

டான் ஶ்ரீ முஹமட் சாஃபியி அப்துல்லா-விற்குப் பதிலாக ஹிஷாம் -மை தமது முதன்மை வழக்கறிஞராக செயல்படவும் அவர் நிர்ணயித்தார்.

நேற்று, தாம் அவ்வழக்கில் இருந்து வெளியேறுவதாக ஹிஷாம் முன்வைத்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததோடு, அரசு தரப்பு தமது வாதத்தை முன்வைக்கவும் உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)