COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
பொது

தமது வங்கி கணக்கில் ஏற்பட்ட பண பரிமாற்றம் குறித்து நஜீப் கேள்வி எழுப்பவில்லை

19/08/2022 07:31 PM

புத்ராஜெயா, 19 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இன்று காலையில் தொடங்கிய வழக்கு விசாரணையில், 2015-ஆம் ஆண்டில் வங்கி கணக்கை மூடும் வரையில், தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பெரிய அளவிலான நிதித் தொகை செலுத்தப்பட்டது மற்றும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பில், டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், AmBank-கிடம் எந்தவொரு கேள்வியையும் முன்வைக்கவில்லை என்று இன்று கூட்டரசு நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டது.

அதோடு, தனது வங்கி கணக்கில் தவறாக பணம் செலுத்தப்பட்டு அதிலிருந்து வெளியேற்றப் பட்டதாக, முன்னாள் பிரதமரான நஜீப், சம்பந்தப்பட்ட வங்கிக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று, மூத்த அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ வி. சிதம்பரம் வாதிட்டார்.

AmBank-கின் இரண்டு அதிகாரிகளான உமாதேவி ராகவன் மற்றும் ஜொவான யூ கிங் பிங் ஆகியோரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், தமது வங்கி கணக்கில் ஏற்பட்ட பண பரிமாற்றம் குறித்து நஜீப், அவ்வங்கியிடம் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை என்றும், அது குறித்து புகார் அளித்ததில்லை என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.

மாறாக, 2015-ஆம் ஆண்டு தமது வங்கி கணக்கை மூடும் வரையில், வங்கி இருப்பில் எந்த பிரச்சனையும் நஜீப் கொண்டிருக்கவில்லை.

அதுமட்டுமின்றி, தமது வங்கி கணக்கில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வதற்கு, தலைமறைவாகியிருக்கும் வர்த்தகர், லோ தெக் ஜோ அல்லது ஜோ லோ, SRC நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, நிக் ஃபைசால் அரிஃப் காமில் மற்றும் தமது முன்னாள் அந்தரங்கச் செயலாளர், டத்தோ அஸ்லின் அலியாஸ் ஆகியோரை நஜீப் பணித்திருந்ததாகவும் சிதம்பரம் கூறினார்.

ஆகவே, பெறப்பட்ட வாக்குமூலங்களில் இருந்து, தமது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட நிதியை, நஜீப் தனது சுயநலனுக்காகதான் அப்பணத்தை செலவிட்டிருப்பார் என்றும், அது குறித்து அவர் நன்கு அறிந்திருப்பார் என்றும் சிதம்பரம் தமது வாதத்தில் முன்வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)