COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
அரசியல்

இந்தோனேசியா, வங்காளதேச பணியாளர் தருவிப்புக்கு இனி தடையில்லை

02/08/2022 05:08 PM

கோலாலம்பூர், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தோனேசியா மற்றும் வங்காளதேசத்திலிருந்து பணியாளர்களைத் தருவிக்கும் அனைத்து செயல்முறைகளையும் மனிதவள அமைச்சு நிறைவு செய்துள்ளது.

எனவே, வெளிநாட்டுத் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான கடப்பாட்டினை முதலாளிமார்கள் கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

''தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் பின்னர் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படும். இனி இவ்விவகாரம் அமைச்சின் பொறுப்பாகாது. வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து செயல்பாட்டு வேலைகளும் நிறைவுபெற்றுவிட்டது. இப்போது அது முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இனி எந்நேரத்திலும் அவர்கள் அவ்விரு நாடுகளிலிருந்து தொழிலாளர்களைத் தருவிக்கலாம்'', சரவணன் தெரிவித்தார்.

எனவே, இனி இந்தோனேசியா, வங்காளதேசம் ஆகிய நாட்டு அரசாங்கங்கள் மலேசியாவுக்கான தொழிலாளர்களைத் தருவிப்பதில், இனி தடை விதிக்காது என்று சரவணன் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில், தொழிலாளர் தருவிப்புக்காக ஏற்கனவே 14 நாடுகள் திறக்கப்பட்டுள்ளதையும் சரவணன் சுட்டிக்காட்டினார்.


-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)