GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
பொது

TUHAN என்ற வார்த்தை மத ரீதியிலான பிரிவா?

23/04/2021 07:48 PM

கோலாலம்பூர், 23 மார்ச் (பெர்னாமா) -- இறைவன் என்பவர் அனைவருக்கும் சமமானவர். மதம் மற்றும் இனங்களுக்கு இடையில் இருக்கும் வேற்றுமைகளால் இறைவன் ஒரு போதும் மாறுபட மாட்டார்.

ஆனால், கடவுளைக் குறிக்கும் TUHAN என்ற மலாய் வார்த்தையை, DEWAN BAHASA DAN PUSTAKA இன ரீதியாக பிரித்திருக்கும் செய்தி அண்மைய சில நாட்களாக சமூக ஊடகங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதன் உண்மை நிலவரத்தைக் கண்டறிய, பெர்னாமா தமிழ்ச்செய்தி மலாய் இலக்கிய எழுத்தாளர் உதயசங்கர் எஸ்.பி-யை அணுகிய போது, அவர் சில தகவல்கள நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

MEREDAH KABUS என்ற தேசிய மொழி சிறுகதை தொகுப்பில், மலாய்க்காரர்கள் எழுதிய பகுதிகளில் TUHAN என்ற சொல்லில், முதல் எழுத்தான T பெரியதாகவும், இதர இனத்தவர்கள் அதே வார்த்தையை எழுதிய போது TUHAN-னின் முதல் எழுத்து சிறியதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுத்தாளர்கள், நூலின் தொகுப்பாளர், மற்றும் ஆலோசனையாளரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, அவர்கள் யாவரும் TUHAN என்ற வார்த்தையின் முதல் எழுத்தை அனைத்து இனத்திற்கும் சமமாக எழுதியதாகவும், DEWAN BAHASA DAN PUSTAKA அதனை திருத்தம் செய்து வெளியிட்டுள்ள தகவல் தமக்கு கிடைத்தாக உதயசங்கர் எஸ்.பி. கூறுகின்றார்.

''ஒரு சிறந்த தேசிய மொழி எழுத்தாளரை தொடர்பு கொண்ட போது, Tuhan எனும் சொல்லுக்கு T எனும் சொல் பெரியதாக எழுத வேண்டும் என்று கூறினார். ஆனால், DEWAN BAHASA DAN PUSTAKA புத்தகத்தை வெளியீடும் போது 't' என்று மாற்றி சிறியதாக அச்சிட்டுள்ளது,'' என்று அவர் கூறினார்.

இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், தாம் உட்பட இன்னும் சில எழுத்தாளர்கள் எழுதி DBP வெளியிட்டுள்ள நூல்களை அலசி ஆராய்ந்தபோது, சிலவற்றில் அதே TUHAN என்ற வார்த்தை பெரிய எழுத்தில் அச்சிடப்படிருந்த வேளையில், அதற்கு அடுத்து வெளியீடு கண்ட பிரதிகளில், அது சிறிய எழுத்தாக மாற்றப்பட்டதாக உதயசங்கர் குறிப்பிட்டார்.

''DBP வெளியீடு செய்த அதிகாரியில் வெவ்வேறான பொருள் வழங்கப்பட்டுள்ளது. Tuhan எனும் சொல் அல்லாஹ் என்றும், tuhan எனும் சொல் இதர மதத்தவர்களின் கடவுள் என்றும் பொருள்ப்படும். எனவே, இதனால் தான் சர்ச்சை எழுந்துள்ளது,'' என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தாம் DBP-யைத் தொடர்பு கொண்ட கேட்டபோது, அல்லா என்ற வார்த்தைக்கே, பெரிய எழுத்துக்கான அனுமதி என்றும், இதர இனத்தரவருக்கு இல்லை என்றும் கூறியதாக உதயசங்கர் வருத்ததோடு தெரிவித்தார்.

கடந்த முறை தம்பி என்ற சொல்லின் வழி அதிருப்தியை ஏற்படுத்திய DBP பின்னர், பல தரப்பினரின் ஒருங்கிணைந்த குரலால், அதில் மாற்றம் செய்வதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, மீண்டும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

எனவே, இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் இதனை அலட்சியமாக விட்டுவிடாமல், விரைந்து அதற்கான தீர்வை காண முன் வர வேண்டும் என்று உதயசங்கர் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

-- பெர்னாமா