Monday, 18 Jan 2021
உலகம்
14/01/2021 05:07 PM

ஜெனிவா, 14 ஜனவரி (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்று உருவாகியதற்கான காரணத்தைக் கண்டறிய உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழுவினர் இன்று வியாழக்கிழமை சீனா, வூஹான் நகரை வந்தடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்நோய்த் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதில் அனைத்துலக ரீதியிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று உலக சுகாதார நிறுவனமான WHO-வின் பேச்சாளர் மார்கரிட் ஹரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் மத்திய நகரில் முதன் முதலாக இந்நோய்ச் சம்பவம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இக்கிருமி இருந்ததாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இது இந்நோய்க் குறித்த அறியப்படாத தகவல்கள் அதிகம் இருப்பதைக் காட்டுவதாக மார்கரிட் ஹரிஸ் தெரிவித்தார்.

இந்நோய் மிருகத்திடமிருந்து மனிதருக்குப் பரவும் சாத்தியம் குறித்தும் இவ்வாய்வின் ஒரு பகுதி அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

''எனவே, மிருகங்களின் சுகாதாரம் குறித்தும் கவனிக்கப்படுகிறது. இந்நோய்ப் பரவியர்களின் பின்னணியும் அவர்கள் எங்கே சென்றார்கள், யாரைச் சந்தித்தார்கள், என்ன நடந்தது என்றும் ஆராயப்படுகிறது. ஆய்வக மாதிரிகளும் ஆய்வுகளும் ஆராயப்படும். இவையனைத்தையும் ஒன்றிணைத்து ஒன்றாக அமர்ந்து முறையாக அது ஆராயப்படும். அதோடு, சிந்தனையை ஒன்றிணைத்து இதுவரை இதுதான் எங்களுக்குத் தெரிந்தது, இதுதான் தெரிய வேண்டி இருக்கிறது, இந்த விவரங்களை எவ்வாறு கண்டுபிடிக்கப் போகிறோம் என்று கூற வேண்டும்,'' என்று  மர்கரெட் ஹரிஸ் கூறினார். 

10 நிபுணர்கள் அடங்கிய WHO-வின் குழு, சீனாவில் கொவிட்-19 நோய்ப் பரவியதில் அதிகம் பாதிக்கப்பட்ட வூஹான் நகருக்குச் சென்றிருக்கின்றனர்.

வூஹான் நகரில் இருக்கும் அந்நிபுணர் குழு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சுமார் ஒரு மாதத்திற்கு அங்கிருந்து கொவிட்-19 குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.

இதனிடையே, இந்நோய்த் தாக்கத்திற்கு மத்தியில் இதுவரை கண்டிராத அளவிற்கு அனைத்துலக ஒத்துழைப்புக் கிடைத்திருக்கிறது.

இது இந்நோய்ப் பரவியதன் பின்னணி குறித்துக் கண்டறியும் வாய்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க