Thursday, 21 Jan 2021
உலகம்
13/01/2021 05:48 PM

ஜகார்த்தா, 13 ஜனவரி (பெர்னாமா) -- சீனா மருந்து நிறுவனமான சினோவெக் பயோடெக் தயாரித்த கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியை, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இன்று புதன்கிழமை செலுத்திக் கொண்டார்.

இந்த தடுப்பூசியைப் பெற்ற 30 நிமிடங்களுக்குப் பின்னர், அவருக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத பட்சத்தில், இத்தடுப்பூசியை பொதுமக்கள் தைரியமாக செலுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேசியா

கடந்த சனிக்கிழமை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு, கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஸ்ரீவிஜயா ஏர் போயிங் 737-500 விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் ஆகாய இராணுவ தளபதி தலைமை அதிகாரி, மார்சல் ஹடி ஜாஜந்தோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து உள்ளடக்கங்களையும் பதிவிறக்கம் செய்ய இரண்டு முதல் ஐந்து நாட்கள் தேவைப்படும் என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் கூறியிருக்கிறார்.

இவ்விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

நியூசிலாந்து

நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் கண்ணாடி கதவுகளை, புதன்கிழமை அதிகாலை கோடரியால் அடித்து நொறுக்கிய நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

ஆனால், அவர் கட்டிடத்திற்குள் நுழைய முயற்சிக்கவில்லை என்றும், இச்சம்பவம் நிகழ்ந்த 10 நிமிடங்களில் 31 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஸ்பெயின்

ஸ்பெயின் தலைநகரில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் சிலர் மெட்ரிட் பராஜாஸ் அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில், இராணுவத்தின் உதவியோடு பனிபொழிவுகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், இரண்டு ஓடுபாதைகள் மற்றும் ஒரு விமான நிலைய முனையம் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த விமான சேவை மீண்டும் செயல்பட தொடங்கினாலும், தங்களது விமான நிறுவனங்களிடமிருந்து எந்தவொரு தகவலும் பெறாத நிலையில், விமான நிலையத்தில் மக்கள் தொடர்ந்து சிக்கித் தவித்து வருகின்றனர்.

-- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க