Thursday, 21 Jan 2021
அரசியல்
11/01/2021 08:49 PM

கோலாலம்பூர், 11 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில் அதிகரித்து வரும் கொவிட்-19 நோய் சம்பவங்களால், பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ம.இ.கா எச்சரித்திருக்கிறது.

மேலும், மக்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு கொவிட்-19 தடுப்பூசிகள் பெறும் வரையில், நாட்டில் பொது தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படக் கூடாது என்று ம.இ.கா தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பொது தேர்தல் நடத்தப்படுவது சாத்தியப்படாத ஒன்று என்றும் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்று மக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று மஇகா தலைமையகத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கும் சந்திப்பு அறையை பார்வையிட்டப்  பின்னர் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

சமீப காலமாக நாட்டின் அரசியலில் சில மாற்றங்களும் குழப்பங்களும் நீடித்து வருவதால் இந்திய சமுதாயத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மஇகா முன்னுரிமை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க