Friday, 27 Nov 2020
உலகம்
21/11/2020 05:04 PM

ஜெனீவா, சுவிட்சர்லாந்து, 21 நவம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கிய முதல் ஆறு மாதங்களில் பதிவான சம்பவங்களைக் காட்டிலும், கடந்த நான்கு வாரங்களில் அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம், WHO கூறுகிறது.

பல உலக நாடுகளில் கொவிட்19 நோயினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பதால், இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனத் தலைவர் தெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், இந்நோயிற்கான தடுப்பூசி மீது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து நற்செய்தி விரைவில் கிடைக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்நோய் கண்டவர்களின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதாக WHO-வின் தொழில்நுட்ப குழு கண்டுபிடித்திருக்கிறது.

கான்பெரா, ஆஸ்திரேலியா

கொவிட்19 நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கனடாவின், டொரொன்ட்டோவிலும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்19 நோயினால், கனடாவில் இதுவரை மூன்று லட்சத்து 20,719 பேர் பாதிக்கப்பட்டிப்பதுடன், 11,334 பேர் பலியாகியிருக்கின்றனர்.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்திற்கு எதிராக போர்க்குற்றம் புரிந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆப்கானிய கைதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 39 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, அண்மையில் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நடவடிக்கை ஆஸ்திரேலியாவுக்கு கலங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்கோட் மோரிசன் தெரிவித்திருக்கிறார். 

அரேபிய கடல்

அரேபிய கடலில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா கூட்டாக சேர்ந்து, கடற்படை பயிற்சிகளில் ஈடுப்பட்டன.

அதன் பயிற்சிகளின் காணொளியை, இந்தியா வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கலிபோர்னியா, அமெரிக்கா

கடல் நீர் மட்டங்களை கண்காணிக்கும் சிறப்பு செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் பாய்ச்சப்படவுள்ளது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் உருவாக்கியிருக்கும் இந்த செயற்கைக்கோள் உலக கடல் மட்டங்களின் உயர்வைக் கண்டறிந்து தரவுகளை சேகரிக்கும்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க