Friday, 27 Nov 2020
விளையாட்டு
21/11/2020 04:41 PM

லண்டன், இங்கிலாந்து, 21 நவம்பர் (பெர்னாமா) -- இங்கிலாந்து, லண்டனில் நடைபெற்று வரும், ஏ.டி.பி தொடர் டென்னிஸ் போட்டியின் தகுதி சுற்றில், உலகின் முதல் நிலை ஆட்டக்காரர், நோவக் ஜோக்கோவிச் உலகின் 7-ஆம் நிலை ஆட்டக்காரரான அலெக்ஸ் ஜவ்ரிவ்வைத் தோற்கடித்திருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம், நோவக் ஜோக்கோவிச் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்றிருக்கிறார்.

ஆறு முறை ஏ.டி.பி கிண்ணத்தை வென்ற ரோஜர் ஃபெடரரின் சாதனையை ஈடு செய்யும் இலக்குடன் விளையாடிவரும் நோவக் ஜோக்கோவிச், இவ்வாட்டத்தில், 6-3, 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றிப் பெற்றார்.

அடுத்து நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில், ஜோக்கோவிச், ஆஸ்திரியாவின் டோமினிக் தீம்மைச் சந்திக்கவிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில்,6-3, 6-3 என்ற நேரடி செட்களில் அர்ஜெண்டினாவின் டியாகோ சவார்ட்ஜெமன்னைத் தோற்கடித்த ரஷ்யாவின் டெனில் மெட்விடிவ், அரையிறுதி சுற்றில் ரஃபேல் நடால்லைச் சந்திக்கவிருக்கிறார்.

2019-ஆம் ஆண்டு அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் மெட்விடிவ், நடாலிடம் தோல்விக் கண்டிருந்தார்.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க