Friday, 27 Nov 2020
சிறப்புச் செய்தி
16/11/2020 07:54 PM

ஜகார்த்தா, 16 நவம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தாலும், உலகில் உள்ள பல நாடுகளின் இவ்வருட தீபாவளி பண்டிகை மிதமான அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மலேசியா போன்று, மலாய் சமுகத்தினரை அதிகமாக கொண்டிருக்கும் இந்தோனேசியாவிலும் தீபாவளி பெருநாள், சகோதரத்துவத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜகார்த்தா, தாமான் வில்லாவில் வசித்து வரும் இந்தோனேசிய இந்திய தலைவர் டாக்டர் ஏ.எஸ். கோபாலனின் தீபாவளி கொண்டாட்டத்தில், ஜகார்த்தாவின் கவர்னர் அனீஸ் பாஸ்வேடன் கலந்து கொண்டார்.

உலகில் மிகப் பெரிய மக்கள் தொகையை கொண்டிருக்கும் ஜகார்த்தாவிற்கு, கவர்னராக பணிபுரியும் அனீஸ் பாஸ்வேடன், தமது இல்லத்திற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கோபாலன் தெரிவித்தார்.

வந்திருந்த அனைவருக்கும் பாரம்பரிய முறையில் வாழை இலையில் உணவுகள் பரிமாரப்பட்டது.

இவ்வாண்டு தீபாவளியை மிதமான அளவிலேயே கொண்டாடி கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோபாலன் கேட்டுக் கொண்டார்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க