பொது

தீயணைப்பு வீரரைத் தாக்க முயன்ற ஆடவருக்கு 6 மாத சிறை

20/10/2020 06:46 PM

காஜாங், 20 அக்டோபர் (பெர்னாமா) -- சிலாங்கூர்,  பண்டார் துன் ஹுசேன் ஓன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கிய காரில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்ட தீயணைப்பு வீரர் ஒருவரைத் தாக்கிய ஆடவருடக்கு ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் ஆறாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

33 வயதான கான் ஹோங் கிட்  (KAN HONG KIT) எனும் அந்த ஆடவர்  தம் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டதால் மாஜிஸ்திரேட் ஷாருல் சஸ்லி முஹமட் சாயின்  (MAJISTRET SYAHRUL SAZLY MUHAMAD SAIN) இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

கடந்த 15-ஆம் தேதி, காலை 10.40 மணி அளவில் ஏற்பட விபத்தில், காரில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துக் கொண்டிருந்த போது, கான் ஹோங் கிட் எரிந்து கொண்டிருந்த அக்காரை நெருங்க முயற்சித்திருக்கின்றார்.

அப்போது தடுக்க முயன்றபோது, அவ்வாடர் 26 வயதான அல்ஃபெரெட் ருடி துங்கு  (ALFRED RUDY TUNGKU) எனும் தீயணைப்பு வீரரைத் தாக்கினார்.

இருப்பினும், மற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் அவ்வாடவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர்,கான் ஹோங் கிட் போதைப்பொருளை உட்கொண்டிருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

கான் ஹோங் கிட்டின் வாகனம் ஓட்டும் லைசன்சும் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டிருக்கிறது.

 - பெர்னாமா