Friday, 23 Oct 2020
பொது
18/10/2020 08:07 PM

கூச்சிங், 18 அக்டோபர் (பெர்னாமா) -- சரவா மாநில சட்டமன்றத்திற்கான தவணை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தவுடன் மாநில தேர்தல் அவசியம் நடத்தப்பட வேண்டும். 

கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இவ்வேளையில், தேர்தலை நடத்த வேண்டாம் என்று தம்மிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டாலும், தவணை முடியும்போது சட்டமன்றம் களைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவது அவசியமான ஒன்று என்று சரவா முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹரி துன் ஒப்பேங் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற சரவா மக்கள் பெர்சத்து கட்சி மாநாட்டின் நிறைவு நாளை முன்னிட்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.  
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க