Friday, 23 Oct 2020
உலகம்
17/10/2020 09:59 PM

மணிலா, அக்டோபர் 17 (பெர்னாமா) -- மணிலாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆக்ஸிடெண்டல் மிண்டோரோ மாகாணத்தில், சனிக்கிழமை காலையில்,  5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக எரிமலை மற்றும் நில அதிர்வு கழகம், PHIVOLCS தெரிவித்துள்ளது.

அந்நிலநடுக்கம் சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் வடகிழக்கிலுள்ள லூக் நகரில் அதிகாலை 4:06 மணிக்கு ஏற்பட்டது.

தெற்கு லூசன் மற்றும் மெட்ரோ மணிலா பகுதிகள் உட்பட பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் மிதமான அளவிலேயே உணரப்பட்டதாக  PHIVOLCS கூறியிருக்கிறது.

அந்நிலநடுக்கம் குறித்து, அக்கழகம் எச்சரிக்கை விடுத்திருந்ததால், அச்சம்பவத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க