Tuesday, 20 Oct 2020
அரசியல்
16/10/2020 06:09 PM

கோலாலம்பூர், 16 அக்டோபர் (பெர்னாமா) -- துன் டாக்டர் மகாதீர் முகமட் தோற்றுவித்த PEJUANG கட்சியைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான விண்ணப்பத்தைச் செய்திருக்கின்றனர்.

மக்களவைத் தலைவர் டத்தோ அஸ்ஹார் அசிசான் ஹருனுக்கு நேற்று, வியாழக்கிழமை அனுப்பிய அறிக்கையில் இந்த தீர்மானம் முன்வைக்கப் பட்டுள்ளது.

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் டாக்டர் மகாதீர் முகமது, குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அமிருடின் ஹம்சா, சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் மற்றும் ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாருடின் முஹமட் சாலே ஆகிய ஐவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றனர்.

கடந்த மே மாதத்தில், இதே தீர்மானத்தை முன்வைத்த டாக்டர் மகாதீர் இரண்டாம் முறையாக பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா இந்த தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர் டான் ஶ்ரீ முகிடின் யாசினுக்கு மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று அமானா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ மஹ்ஃபுஸ் ஒமாரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைப் பதிவு செய்திருப்பதாக உள்நாட்டு செய்தித்தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க