Tuesday, 20 Oct 2020
10/10/2020 08:14 PM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- குடிநுழைவு கைதிகளிடையே கொவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், சபாவில் நான்கு பகுதிகளில், சட்டவிரோத குடியேறிகளுக்காக தற்காலிக தனிமைப்படுத்தும் மையத்தை அரசாங்கம் உருவாக்க விருக்கிறது.

கைதிகளுக்கு அப்பெருந்தொற்று பரவாமல் இருக்க, குடிநுழைவு தடுப்பு மையங்களில் அனுப்பப்படுவதற்கு முன்பதாக, புதிய கைதிகள் இந்த தற்காலிக மையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

அதேவேளையில்,தற்காலிக தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்ட புதிய கைதிகள் அனைவரிடமும், கொவிட்-19 சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  குறிப்பிட்டார்.

மேலும், PKPD எனப்படும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மற்றும் PKPB எனப்படும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. 

''பச்சை மற்றும் மஞ்சள் மண்டலப் பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அப்பகுதிகளில் உள்ளவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள செயல்பாட்டு தர விதிமுறையை முறையாகப் பின்பற்ற வேண்டும்,'' என்று 
இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தற்காப்பு அமைச்சர் அவர் இதனைத்  தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள TROPICANA CORPORATION நிறுவனத்தின் தொழிலாளர் தங்குமிடத்தில், அக்டோபர் 12-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி அக்டோபர் 25-ஆம் தேதி வரையில், 14 நாட்களுக்கு PKPD எனப்படும் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப் படவிருக்கிறது. 

அதோடு, பண்டார் உத்தாமாவில் இருக்கும் 1UTAMA பேரங்காடியும், இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்கி ஏழு நாட்களுக்கு மூடப்படவிருக்கிறது.

-- பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க