Wednesday, 23 Sep 2020
16/09/2020 07:37 PM

புத்ராஜெயா, 16 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் உள்நாட்டினர் இடையே கொவிட்-19 நோய் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று நண்பகல் 12 மணி வரையில் பதிவாகிய 62 புதிய சம்பவங்களில் 61 சம்பவங்கள் உள்நாட்டினரை உட்படுத்தியதாகும்.

அதில், 60 சம்பவங்கள் சபாவில் பதிவாகி இருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

சபாவில் பதிவாகிய சம்பவங்களில், 48 சம்பவங்கள் பெந்தெங் எல்.டி. (BENTENG LD) தொற்றுடன் தொடர்புடையது என்றும் அதில் 20 சம்பவங்கள் அந்நிய நாட்டினரை உட்படுத்தியது என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.

எஞ்சிய இரண்டு சம்பவங்கள், கெடா, சுங்கை தொற்றில் ஒரு சம்பவமும், மற்றொரு சம்பவம் பினாங்கிலும் பதிவாகி இருப்பதாக, அவர் தெரிவித்தார். இன்று பதிவாகிய புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து, நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்திருக்கிறது.

இன்று இந்நோயினால், எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகாத நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 128-ஆக நீடிக்கிறது. 

-- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க