Wednesday, 23 Sep 2020
சிறப்புச் செய்தி
12/09/2020 08:06 PM

கோலாலம்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் எதிரொலியால் கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் முடக்கம் கண்ட நிலையில், இயங்கலை வழி பல முயற்சிகளும் போட்டிகளும் அதிகமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மலேசியாவைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் பிரான்ஸ் பாரிஸ்யில் நடைபெற்ற இயங்கலை வழியான நடன போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கின்றனர்.

மார்ச் மாதம் பாரிஸ், மொல்டாவில் நடைபெறவிருந்த நடன போட்டியில் கலந்து கொள்வதற்கு தயார் நிலையில் இருந்த சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த  உமா நவலிங்கம் மற்றும் ரீதா நடராஜா எனும் ஆசிரியர்கள், கொவிட்-19 நோய் காரணமாக அங்குச் செல்ல முடியமால் போனது.

பின்னர், அதே போட்டி இயங்கலை வழி நேரலையாக நடத்தப்பட்ட போது, சவால் மிக்க நிலையில் அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டதுடன், வெற்றியும் பெற்றதாக ஆசிரியர் ரீதா நடராஜா தெரிவித்தார்.

''இயங்கலை வழி நடன போட்டியில் கலந்து கொள்வது சுலபம் அல்ல. அப்போட்டியில் கலந்து கொள்ள கஷ்டபட்டு பயிற்சி எடுத்தோம். மாறுப்பட்ட முறையில் நடைப்பெற்றது காரணம் நீதிபதிகள் நேரலையாக பார்ப்பார்கள். எனவே, இது எங்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.'' என்று அவர் கூறினார்.

இதனிடையே, இந்த வெற்றியின் தொடர்ச்சியாக அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் நடன போட்டியில் தாங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதுடன், 16 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் களம் இறங்க விருப்பதாகவும் ரீதா தெரிவித்தார்.

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysian National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க