BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
அரசியல்

சபா தேர்தல்: முஹமட் சஃபி அப்டால் நான்கு வேட்பாளர்களுடன் போட்டியிடுகிறார்

12/09/2020 07:36 PM

செம்பொர்னா, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சஃபி அப்டால் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற செனால்லாங் (SENALLANG) சட்டமன்றத் தொகுதியை தக்கவைத்துக் கொள்ள, இதர நான்கு வேட்பாளருடன் மோத வேண்டியிருக்கிறது. 

செம்பொர்னா சமூக மண்டபத்தில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் காலை 10 மணிக்கு நிறைவடைந்ததும், அத்தொகுதியின் தேர்தல் நிர்வாக அதிகாரி பெனடிக்ட் அஸ்மாட் (BENEDICT ASMAT) வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காலை 11.10-க்கு அறிவித்தார். 

சபா வாரிசான் கட்சியின் தலைவருமான முஹமட் சஃபி, பேரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும் தமது உறவினருமான நோராஸ்மான் உத்தோ நைன் (NORAZMAN UTOH NAIN), சபா மக்கள் ஒருமைப்பாட்டு கட்சி வேட்பாளர் அஹ்மாட் டத்து அலி அலாம் (AHMAD DATU ALI ALAM), உஸ்னோ (USNO) கட்சி வேட்பாளர் , முஹமாட் ரம்சான் அப்துல் வஹாப் (MOHAMMAD RAMZAN ABDUL WAHAB) மற்றும் சபா சிந்தா (CINTA) கட்சி, மட்ஜலிஸ் லையிஸ் (MADJALIS LAIS) ஆகியோருடன் களம் காண்கிறார். 

''நாம் கடுமையாக உழைக்க வேண்டியதைத் தவிர்த்து, அனைத்து தரப்பினரும் நமக்கு தேவையான அளவிற்கு நல்ல ஆதரவை தர வேண்டும் என்று இறைவனிடமும் நாம் பிரார்த்தனைச் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், நமக்கு திட்டங்கள் இருக்கின்றன. நாம் வகுத்திருக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்,'' என்று முஹமட் சஃபி கூறினார்.

இதனிடையே, சபா மாநில துணை முதலமைச்சரும், மாநில வாரிசான் கட்சியின் உதவித் தலைவருமாகிய டத்தோ டாக்டர் ஜௌஜான் சம்பாகொங் (DATUK DR JAUJAN SAMBAKONG), சுலபாயான் (SULABAYAN) சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்து, மும்முனை போட்டியில் களம் இறங்குகிறார். 

-- பெர்னாமா