BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
அரசியல்

அம்னோவில் மூசாவுக்கு கதவடைப்பா? - போலியான தகவல் என்கிறார் புங் மொக்தார்

01/08/2020 08:26 PM

சபா, 31 ஜூலை (பெர்னாமா) --விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில தேர்தலில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் Tடான் ஶ்ரீ மூசா அமான் அம்னோவை பிரதிநிதித்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று வெளியாகியிருக்கும் தகவலில் உண்மையில்லை என்று டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.

''அது ஒரு போலியான தகவல். அதை நான் கூறவில்லை. எனக்கும் மூசா அமானுக்கு கலகத்தை ஏற்படுத்துவதோடு அம்னோவின் நற்பெயரையும் கெடுக்கும் விதமாக இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் அம்னோவை வலுவிழக்கச் செய்ய விரும்பும் பொறுப்பற்றவர்களால் உருவாக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளால்  நான் கவலையடைவதில்லை. ஏனெனில் பொதுவாக இதுபோன்ற போலி செய்தி தன்னைத்தானே பாதிக்கும்'', என்றார் அவர்.


அம்னோவில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனில் சபா தேர்தலுக்கான அம்னோ வேட்பாளர் பட்டியலிலிருந்து டான் ஶ்ரீ மூசா அமான் பெயரை நீக்க வேண்டும் என்று நேற்று சனிக்கிழமை ஓர் உள்ளூர் செய்தித்தளம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 - பெர்னாமா