Thursday, 06 Aug 2020
பொது
01/08/2020 08:02 PM

கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேபாள பாதுகாவலர் ஒருவர் வாகன நிறுத்துமிடத்தில் உருளைக் கம்பால் தாக்கப்பட்ட 44 விநாடி காணொளி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. 

இதுபோன்ற பிரச்சனைகளைக் களைய அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் அவர்களுக்கென புகார்த் தளங்களை நிறுவ வேண்டும். 

இதன் மூலம் அவர்களுக்கு எதிரான அடக்கு முறை அல்லது வன்முறை புகார்கள் யாவும் நீதியின் பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று, சுவாராம் (SUARAM) எனப்படும் மனித உரிமை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற செயல்கள் குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகள் கடுமையாக நடந்துகொள்ளாமல் விதிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பெர்னாமா தொலைக்காட்சி தொடர்பு கொண்டபோது அவர் குறிப்பிட்டார். 

இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ், விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் படைத் தலைவர் சுப்ரிடென்டன் ராஜ ஆஹாட் இஸ்மாயில் தெரிவித்தார். 

கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று வங்சா மாஜூ, ஜாலான் மட்ராசா ஆடம்பர அடுக்குமாடியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க