Sunday, 09 Aug 2020
பொது
01/08/2020 07:47 PM

ஜெனிவா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஜோ லோ என்றழைக்கப்படும் லோ டேக் ஜோவால் நிர்வகிக்கப்படும் வங்கிக் கணக்கிற்கு 70 கோடி அமெரிக்க டாலர் அல்லது 290 கோடி ரிங்கிட் மதிப்புள்ள கள்ளப் பணம் பறிமாற்றம் செய்தது தொடர்பான மோசடி குறித்து எச்சரிக்கத் தவறிய கவுட்ஸ் & கோ (Coutts & Co) வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.   

மேலும், 1.எம்.பி.டி.பி தொடர்பான ஊழல் நடவடிக்கைக்கு காரணமாகவும் செயல்பட்டார் என்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

'ஏ' (A) என்று அழைக்கப்படும் அந்நபருக்கு, 50,000 ஸ்விஸ் ஃப்ரான்க் அதாவது 232,636 ரிங்கிட் அபராதம் விதித்து சுவிட்சிலார்ந்தின் கூட்டரசு குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 

இம்மோசடி தொடர்பில் சந்தேகக் கூறுகளை அறிந்திருந்தும், அது குறித்து தமது மூத்த அதிகாரியிடம் தெரிவிக்காமலேயே 'ஏ' எனப்படும் அந்நபர் அவ்வங்கியைவிட்டு வெளியேறியதாக, நீதிமன்றம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. 

1.எம்.டி.பி-யிலிருந்து குட் ஸ்டார் (Good Star) எனப்படும் வங்கிக் கணக்கிற்கு 70 கோடி அமெரிக்க டாலர் அதாவது 290 கோடி ரிங்கிட்டை மாற்றக் கோரிய ஜோ லோவின் விண்ணப்பத்திற்கு அந்நபர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

இதனிடையே, 1.எம்.டி.பி தொடர்பான ஊழல் மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோவை மலேசியா தேடி வருகிறது. 

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வீழ்ச்சிக்கு 1.எம்.டி.பி ஊழல் வழக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

-- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க