Thursday, 06 Aug 2020
பொது
01/08/2020 06:38 PM

புத்ராஜெயா, 01 ஆகஸ்ட் (பெர்னாமா) --நாட்டில் இன்று நண்பகல் வரை ஒன்பது புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதைத் தொடர்ந்து  இந்நோய்க் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,985-ஆக அதிகரித்திருக்கிறது. 

அதில் ஏழு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை உட்படுத்தியது என்றும், எஞ்சிய இரண்டு சம்பவங்கள் உள்நாட்டில் பரவியதாகும் என்றும், சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். 

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களில் ஐவர் மலேசியர்கள் என்றும் எஞ்சிய இருவர் அந்நிய நாட்டினர் என்றும், இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் நோர் ஹிஷாம் கூறினார். 

அதோடு, உள்நாட்டில் பரவிய இரு சம்பவங்களில் ஒருவர் மலேசியர் என்றும் ஒருவர் அந்நிய நாட்டினர் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று மூவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். 

இந்நோயால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரில் ஒருவருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. 

இன்று கொவிட்-19 நோயினால் எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகததைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 125 ஆக நீடிக்கிறது

- பெர்னாமா. 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க