உலகம்

கொவிட்19 : நோய் எதிர்ப்பு சக்திக்குத் தமிழகத்தில் ஆயுர்வேத மருந்துகள்

31/07/2020 09:52 PM

சென்னை, 31 ஜூலை (பெர்னாமா) -- தமிழகத்தில் கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்திற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவமான கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை அந்நோயிக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே முக்கிய காரணமாக விளங்குவதால் ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்திருக்கிறது. 

இந்நிலையில்  கொவிட்19 சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 

அதன்படி இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் மருந்துகள் வழங்கப்படுவாதகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

இந்து காந்தகஷாயம் திருவில்லியம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகளால்  தயாரிக்கப்பட்டுள்ளதால், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மருத்துவரின் அறிவுரையின்படி உட்கொள்ளலாம் என்றும் தகவல் கூறுகிறது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

--பெர்னாமா