Thursday, 06 Aug 2020
27/07/2020 09:33 PM

கோலாலம்பூர், 27 ஜூலை (பெர்னாமா) -- 18 வயதிற்கு கீழ்பட்ட தங்கள் பிள்ளைகளை சைக்கிள் சவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 1,000 முதல் 5,000 ரிங்கிட் வரை அபராதமோ அல்லது ஒரு வருடத்திற்கும் கூடுதலான சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்.

இன்று மக்களவையில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்பட்ட 1987 சாலை போக்குவரத்துச் சட்ட திருத்தங்களின் கீழ் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ  கா சியோங் கூறினார்.

''தண்டிப்பது எங்கள் நோக்கமல்ல. ஒருவேளை பிரேக் பிடிக்காத இந்த சைக்கிள் சவாரிக்கு நாங்கள் அனுமதி அளித்தால் நினைத்துப் பாருங்கள், எந்த நேரத்திலும் விபத்து நேரலாம். எனவே மக்களின் பயத்தைப் போக்குவதற்கு முன்பு நாங்கள் ஒரு திருத்தத்தை செய்ய விரும்புகிறோம். இப்போது விதிமுறையும், தவறு செய்பவர்களுக்கான தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது", என்று வீ கூறியிருந்தார். 

திங்களன்று மக்களவை உறுப்பினர்களுக்கு இம்மசோதா குறித்து விளக்கமளித்த பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, வாகனம் ஓட்டும்போது தூங்கி விபத்து ஏற்படுவதற்கோ அல்லது மரண விளைவித்தலுக்கோ காரணமாக விளங்குபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீ கா சியோங் தெரிவித்தார்.

- பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk[at]bernama.com, tamil[at]bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க