Thursday, 02 Jul 2020
உலகம்
30/06/2020 05:05 PM

நியூசிலாந்து

கொவிட்-19 நோய்த் தாக்கத்தால், அடுத்த ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஆசிய தலைவர்களுடனான, ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு, APEC மாநாட்டை நடத்தும் திட்டத்தை நியூசிலாந்து செவ்வாய்க்கிழமை ரத்து செய்திருக்கிறது. 

அதற்கு பதிலாக இயங்கலை உச்சநிலை மாநாட்டை வழிநடத்தவும் அந்நாடு எண்ணம் கொண்டிருக்கிறது. 


ஐரோப்பா

ஐரோப்பாவில் நுழைய அனுமதிக்கப்படும் நாடுகளின் பட்டியலைத் தயார் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்திருக்கின்றன. 

தற்போது அமெரிக்காவில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், இப்பட்டியலில் அந்நாட்டு குறுகிய காலத்திற்கு இடம்பெறாமல் போகலாம் என்று நம்பப்படுகிறது. 


ஆஸ்திரேலியா

கொவிட்-19 நோய்த் தாக்கத்தினால், உலகளவில் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், தற்போது சைக்கிளைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகள் குறிப்பாக சைக்கிளைப் பயன்படுத்துபவர்களால் நிகழும் விபத்துகள் 30 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. 


இங்கிலாந்து 

இங்கிலாந்தில், கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொது முடக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகி வருவதைத் தொடர்ந்து மக்களும் வர்த்தகர்களும் அதற்கான தயார்நிலை பணிகளில் இறங்கி இருக்கின்றனர். 


அரிசோனா

அரிசோனாவில், புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு மனமகிழ் மையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையறங்குகள், நீர் கேளிக்கை பூங்காக்கள் திங்கட்கிழமைத் தொடங்கி குறைந்தது 30 நாட்களுக்கு மூடப்படவிருக்கின்றன. 


அமெரிக்கா

கருப்பின ஆடவரான ஜார்ஜ் ஃப்ளோயிட்டின் மரணத்திற்கு காரணமான நான்கு போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில், மினியாபோலிஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். 

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பிறகு, இதில் சம்பந்தப்பட்ட முக்கிய போலீஸ் அதிகாரியான 44 வயதுடைய டெரெக் சாவின் 10 லட்சம் அமெரிக்க டாலர் ஜாமினில் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். 

தோ தாவ் என்பவர் ஏழு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் ஜாமினிலும், லேன் மற்றும் குவேன் ஜாமின் தொகை விதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 

இவ்வழக்கின் மறு விசாரணை செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.  

--பெர்னாமா

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க