Thursday, 02 Jul 2020
விளையாட்டு
30/06/2020 04:06 PM

மெட்ரிட், 30 ஜூன் (பெர்னாமா) --லா லீகா கிண்ண போட்டியில், பார்சிலோனா நாளை அதிகாலை அட்லெட்டிகோ மெட்ரிட் உடன் களம் காணவிருக்கிறது. 

புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும், பார்சிலோனா அந்த இடத்தைத் தற்காத்துக்கொள்ள தனது அரங்கில் நிச்சயம் வெற்றிக் காணும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

பார்சிலோனாவை தோற்கடிக்கும் இலக்குடன், அட்லெட்டிகோ மெட்ரிட், நியூ கேம்ப் அரங்கில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. 

ஒருவேளை, அட்லெட்டிகோ மெட்ரிட் இதில் தோல்வி அடைய நேர்ந்தால், நான்காம் நிலையில் இருக்கும் செவிலா அதனை முந்திச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், அது கவனமாக விளையாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றிருக்கும் லிவர்பூலின் வெற்றியை அதன் ரசிகர்கள் பல்வேறு பொது இடங்களில் கொண்டாடி வருகின்றனர். 

கொவிட்19 பெருந்தொற்று தாக்கத்தை கருத்தில் கொண்டு, லிவர்பூல் ரசிகர்கள் பாதுகாப்பான வழியில் அதனைக் கொண்டாட வேண்டும் என்று அதன் நிர்வாகி ஜூர்கன் க்ளோப் வேண்டுக்கோள் வைத்திருக்கின்றார். 

--பெர்னாமா
 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க