Wednesday, 27 May 2020
பொது
22/05/2020 07:21 PM

புத்ராஜெயா, 22 மே (பெர்னாமா) -- விரைவில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவிருக்கும் வேளையில், பரிந்துரைக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறையைப் பின்பற்றி புதிய இயல்பு நிலையில் இப்பெருநாளைக் கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டிருக்கிறது. 

கொவிட் 19 பரவி வரும் காலகட்டத்தில் ஒரு மாதம் நோன்பிருந்தவர்களுக்கு, பொறுமை மற்றும் தியாகத்தின் உண்மையான அர்த்ததை இம்மாதம் கற்பித்திருப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார். 

கொவிட் 19 நோய்க் கட்டுப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ரமலானும் புதிய இயல்பு முறையில் பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார். 

நோன்புப் பெருநாளின்போது உணவுகளைத் தயார் செய்வதிலும் குறிப்பாக தரமான மற்றும் பாதுகாப்பான சமையல் முறைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியிருக்கிறது. 

புத்ராஜெயாவில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தொடர்பான சிறப்புச் செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 

இதனிடையே நாட்டில், இன்று, மேலும் 78 புதிய கொவிட் 19 சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில், இந்நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,137 ஆக பதிவுச் செய்யப் பட்டிருக்கிறது. 

கொவிட்-19 நோயாளிகளில் 63 பேர் குணமடைந்து வீடுத் திரும்பி இருப்பதன் வழி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,859 ஆக பதிவாகி இருக்கிறது. 

கொவிட் 19 நோயினால் ஒருவர் உயிரிழந்திருப்பதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 115 ஆக பதிவாகி இருக்கிறது. 

கொவிட்-19 நோய் காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும், 9 பேரில், ஐவருக்குச் சுவாசக் கருவியின் உதவித் தேவைப்படுவதாகவும் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். 

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க