Saturday, 30 May 2020
உலகம்
22/05/2020 03:57 PM

22 மே (பெர்னாமா) -- மிக விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, பாகிஸ்தான் கராய்ச்சியில் உள்ள சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிமாக காணப்படுகிறது. 

பொருட்களை வாங்கும் மக்களில் பெரும்பாலோர், தொடுகை இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். 

மற்றொரு நிலவரத்தில், பொதுச் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி, பிரான்ஸ் பாரிசில் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் முகக் கவசங்களை அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இருப்பினும், பாதுகாப்பு இடைவெளி உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இவர்களில் 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் இதுவரை, 51,99,016 பேருக்கு கொவிட்-19 நோய்த் தொற்று கண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இந்நோயினால் இதுவரை, 334,698 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க