விளையாட்டு

ஜெர்மனி பண்டேஸ்லீகா: போருசியா டார்ட்மண்ட் வெற்றி

17/05/2020 07:21 PM

டார்ட்மண்ட், 17 மே (பெர்னாமா) -- கொவிட்-19 நோய் எதிரொலியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஜெர்மனி பண்டேஸ்லீகா காற்பந்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. 

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், போருசியா டார்ட்மண்ட், 4-0 என்ற கோல்களில் ஷல்கெ-வை தோற்கடித்தது. 

எப்பொழுதும் ரசிகர்களால் நிரம்பியிருக்கும் அரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. 

விளையாட்டாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் உட்பட வெகுச் சிலரே அரங்கத்தினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 

முதல் பாதி ஆட்டத்தின் 29 மற்றும் 45-வது நிமிடங்களின் இரண்டு கோல்களை அடித்து போருசியா டார்ட்மண்ட் முன்னணி வகித்தது. 

இரண்டாவது பாதி ஆட்டத்தில், ஷல்கெ பல முயற்சிகள் செய்தும், 48 மற்றும் 63-வது நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை அடித்து போருசியா டார்ட்மண்ட் ஆட்டத்தை 4-0 என்ற கோல்களில் வெற்றி கொண்டது.

-- பெர்னாமா